துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சென்னை வருகை

சென்னை: இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு 4 நாட்கள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வருகிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், கார் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். ஐஐடியில் நடக்கும் ஒரு விழாவில் வெங்கய்யா நாயுடு கலந்து கொள்கிறார். அதோடு சென்னையில் மேலும் ஓரிரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஜூலை 2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னையிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார்.

Related Stories:

More
>