×

தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி பணி நிறுத்தம்: மீண்டும் 2 லட்சம் கோவிஷீல்டு வருகை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 2லட்சம் கோவிஷீல்டு வந்துள்ளது.   தமிழகத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்படுகிறது. இதில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒருசில தனியார் மையங்களில் மட்டுமே போடப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 1,41,50,249பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி, 1.50 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசின் நேரடி கொள்முதலும் அதிகளவு கிடைக்கவில்லை. இதனால், அடிக்கடி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, 5,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் இருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக, 3,000க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீண்டும் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை மட்டுமே அந்தந்த மையங்கள் பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன. சென்னையில் 400க்கு மேல் இருந்த தடுப்பூசி மையங்கள் 64 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வார்டுக்கு மூன்று மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதை தவிர அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவனைகளில் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் 20,109 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இதுவரை 25,25,905 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் நேற்று தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு சில மையங்களை தவிர மற்ற மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்களில் வைத்து தேவையான மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags : Gowishfield , Vaccine strike in most centers due to shortage: 2 lakh Govshield returns
× RELATED புனேவில் இருந்து 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன..!