×

காஞ்சிபுரத்தில் ஒன்றரை மாதத்துக்கு பிறகு பட்டு சேலை விற்பனை கடைகள் திறப்பு

காஞ்சிபுரம்:  கொரோனா வைரஸ் தொற்று குறைவின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவில்  தளர்வுகளை அறிவித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், உட்பட 27 மாவட்டங்களில் ஜவுளி கடைகளையும், துணி கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.  அதன்படி பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு பட்டு கூட்டுறவு சங்கங்களும், தனியார் பட்டு சேலை கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை கடைகள் திறப்பதை அறிந்த ஏராளமான வெளிமாநில வெளிமாவட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சி தேவையான பட்டு சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்துள்ளனர்.பட்டுச் சேலை கடைகளை திறந்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கினால் ₹200 கோடி பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : saree ,Kanchipuram , Saree shops open in Kanchipuram after a month and a half
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...