காஞ்சிபுரத்தில் களைக்கட்டியது அனைத்து கோயில்களும் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசத்தி பெற்ற கோயில்களான வரதராஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் நேற்று காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்ட பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கோயில்களில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கோயில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 48 நாள்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories:

>