×

தமாகா மாவட்ட தலைவர் காங்கிரசில் இணைந்தார்

ஆவடி: தமாகாவில் இருந்து விலகி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் விக்டரிமோகன் உள்பட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, தமாகாவிற்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில், போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். தேர்தலுக்கு முன்பாக, எம்எல்ஏ சீட்டு கிடைக்காததால், முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு வெளியேறினர். மேலும், தேர்தலுக்கு பிறகும், தமாகா நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதன்படி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவரும், ஆவடி பெருநகராட்சி முன்னாள் தலைவருமான விக்டரி மோகன், சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் சென்னையில் உள்ள அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்பியை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், மாவட்ட பொதுச்செயலாளர் கிளாம்பாக்கம் வக்கீல் எம்.சிவகுமார், திருவள்ளூர் வட்டார தலைவர் ஈகை.ஜோஷி பிரேமானந்த், மற்றும் காங்கிரஸ் மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.கோதண்டன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விக்டரி ஜெயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Tamaga ,Congress , The Tamaga district chief joined the Congress
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை...