கர்நாடகாவில் ஜூலை 19, 22ல் பத்தாம் வகுப்பு தேர்வு

பெங்களூரு: கர்நாடக மாநில கல்வியமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் நேற்று அளித்த பேட்டி: இவ்வாண்டும் கொரோனா விதிமுறைகள் முழுமையாக பின்பற்றி வரும் ஜூலை 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வும் 22ம் தேதி முதல்மொழி, 2வது மற்றும் மூன்றாவது மொழிகளுக்கான தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தலா 40 மதிப்பெண்கள் என்ற வகையில் கேள்விகள் இருக்கும்.  ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வசதி செய்யப்படும். தேர்வுகள் இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடக்கும். மாணவ, மாணவிகள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வது, சானிடைசர் மூலம் கை சுத்தம் செய்வது  உள்பட பல பணிகள் மேற்ெகாள்ளப்படும் என்றார்.

Related Stories: