கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசாமி கைது

தண்டையார்பேட்டை: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, சென்னை மாநகராட்சியின் முன்களப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், தினசரி வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெருவில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த வாலாராம் (45) என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் மாணவி தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், மாணவி இதுபற்றி பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வாலாராம், மாணவியிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாலாராமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories:

>