×

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை ஐரோப்பாவிற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை ஐரோப்பாவிற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீரம் இன்ஸ்டியூட் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவுவதை தடுக்க தடுப்பூசியுடன் கூடிய கடவுசீட்டு என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.

இதன்படி குறிப்பிட்ட 4 கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களை மட்டுமே தங்கள் பகுதிக்குள் ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கின்றனர். இந்த 4 தடுப்பூசிகள் பட்டியலில் இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு இடம்பெறவில்லை. இதனால் இந்தியாவில் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் கல்வி, வணிகம், தொழில் ரீதியான பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பட்டியலில் கோவிஷீல்டையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி சீரம் இன்ஸ்டியூட் தலைமை அதிகாரி அதர்பூனா வாலா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



Tags : Covshield ,Europe , covishild
× RELATED அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா...