×

நூதன முறையில் கொள்ளையடித்தது எப்படி?: எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் மையத்தில் நடித்து காட்டும் கொள்ளையன் அமீர்..!!

சென்னை: நூதன முறையில் கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து கொள்ளையன் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்ததாக எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பலை பிடிப்பதற்காக அரியானாவில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தனிப்படை போலீசார் முகாமிட்டிருக்கிறார்கள். 


தொடர்ந்து கொள்ளையனை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 9  பேர் கொண்ட கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளையில் முதலில் கைது செய்யப்பட்ட அமீரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையன் அமீரிடம் தொடர்ந்து 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஏ.டி.எம். கொள்ளையன் அமீரை, கொள்ளையடித்தது எப்படி என நடித்து காட்டுமாறு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 


ஏ.டி.எம். மையத்தில் எவ்வாறு கொள்ளை நடத்தப்பட்டது என்பது குறித்து அந்த ஏ.டி.எம். மையத்திற்கே அழைத்து சென்று அமீர் செய்வதை வீடியோ பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை பெரியமேட்டில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அமீரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த விசாரணையானது தெற்கு இணை ஆணையர் நரேந்திர நாயர் மற்றும் துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  



Tags : SBI ,Aamir , Robbery, ATM Center, Robber Amir
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...