×

25 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு பலன்.. ரூ.1.25 லட்சம் கடன் பெறலாம்.. அரசே உத்தரவாதம் வழங்கும் : நிர்மலா சீதாராமன் அதிரடி


டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவாதத்துடனான 1.1 லட்சம் கோடி நிதி திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கொரோனா நிவாரண நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

*கொரோனாவால் அடிவாங்கிய துறைகளுக்கு மொத்தமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாத கடன் வழங்கப்படும்.

*மருத்துவ துறைக்கு 7.95 சதவீதத்துடன் 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

*கொரோனாவால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.  

*சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்

*சுகாதாரத் துறை தவிர்த்து மற்ற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும், அதற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருக்கும்.

*அவசர கால கடனாக தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் கோடி கடன் வழங்கப்படும்

*25 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் வரையிலும், டூரிஸ்ட் ஏஜென்ஸிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு (Tourist Guides) 1 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

* 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்.

Tags : Elise , கொரோனா
× RELATED வருவாய் சரியாக நாட்டுக்கு வருவதை...