செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முதன்முதலில் தரையிறங்கியது சீனாவின் ஜுராங் ரோவர்

பெய்ஜிங்: உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் பக்கம் திரும்பியது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் கடந்த 15-ம் தேதி செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.

தியான்வென் -1 பயணத்தின் ஒரு பகுதியாக சூரிய சக்தியில் இயங்கும் ஜுராங் முதன்முதலில் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் வானிலை, சுற்றுச்சூழல் குறித்து ஆராய்வதற்காக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜுராங் ரோவாரை அனுப்பியது. இந்நிலையில் மே 21ம் தேதி அந்த ரோவர் தரையிறங்கியது. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள தியான்வென் -1 சுற்றுப்பாதையில் இருந்து இறங்கிய பிறகு, ஜுராங் தனது செவ்வாய் பயணத்தை உட்டோபியா பிளானிட்டியாவில் தொடங்கியது. இது ஒரு மென்மையான சமவெளி, நாசாவின் வைக்கிங் 2 லேண்டர் 1976-ல் இந்த பகுதியை தொட்டது. இது ஜெசரோ பள்ளத்திலிருந்து 1,000 மைல்களுக்கு அப்பால் அமெரிக்க ரோவர் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சீனா தனது ரோவர் ஜுராங்-ன் புதிய படங்களை வெளியிட்டு இருந்தது. சீனா தனது ஜுராங் ரோவர் செவ்வாய்கிரகத்தில் இறங்கிய ஆடியோவை வெளியிட்டுள்ளது என்று ஸ்பேஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. அப்போது பதிவான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதோடு செவ்வாய் கிரகத்தின் உத்தோப்பியா பிளானீஷியா என்ற பகுதியில் ஜுராங் ரோவர் நகர்ந்து செல்லும் வீடியோவையும் சீன விண்வெளி ஆராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Stories:

More
>