ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு: சவுரவ் கங்குலி அறிவிப்பு

மும்பை: ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.  இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்போப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக அதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்று வரை அவகாசம் வழங்கியது. இதற்கிடையே 20 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்திருந்த  இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா, நாட்டில் நிலவும் கொரோனா நிலை காரணமாக, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இருபது ஓவர் உலகக்கோப்பையை, நாம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாம்.

நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியமானவை. நாங்கள் விரைவில் இறுதி அழைப்பை எடுப்போம் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்தியாவில் நடைபெறவிருந்த இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Related Stories: