தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள் துவக்கப்படுமா?நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை : நெல்லையின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு. நெல்லை மாவட்டத்திற்கு மட்டுமின்றி ெதன்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்கு பயனளிக்கிறது. விவசாயம், ெதாழில் நிறுவனங்களுக்கும் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சிறப்பு மிக்க தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வழியாக நேரடியாக கலக்கிறது.

குறிப்பாக நெல்லை குறுக்குத்துறை, சிஎன்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் சங்கமிக்கிறது. சில பகுதிகளில் கால்வாய் போல் பெருக்கெடுத்து ஆற்றில் சேர்கிறது. இதனால் மாநகர பகுதியில் தாமிரபரணி நீர் சில இடங்களில் கலங்கலாக ஓடுகிறது. இப்பகுதிகளில் குளிப்பவர்கள் ேதால் நோய், உடலில் அலர்ஜி போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மாநகர பகுதியில் கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் ஆற்றங்கரையோரம் தனியாக செல்ல ஓடைபோல் அமைக்கப்பட்டது. ஆனால் அதிலும் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டு அத்திட்டம் பயனளிக்கவில்லை. தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு செய்துவிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

எனவே பாதாள சாக்கடை திட்டம் அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் தனியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: