கும்பகோணம் அருகே வாகன சோதனை காரில் புதுச்சேரி மது கடத்திய 4 பேர் கைது-18 பாட்டில்கள் பறிமுதல்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே போலீசார் வாகன சோதனையில் காரில் புதுச்சேரி மது கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் 18 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் ஆடுதுறை சாலையில் தனிப்படை உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டதில் காரில் புதுச்சேரி மதுபாட்டில்கள் 18 இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து காரில் வந்த திருபுவனம் கண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் பர்வீன் குமார்(22) அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜா(44) குமார் மகன் சுரேஷ்(32) மற்றும் அம்மாசத்திரம் சாமி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் கனகராஜ் (49) உட்பட 4 பேரை கைது செய்தனர்.மேலும் அதேபோல் 26 பாண்டிச்சேரி குவாட்டர் பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்திவந்த திருவிடைமருதூர் கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் சதீஷ்(32).என்பவரை கைது செய்து அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது .

Related Stories:

More