×

சென்னை கொருக்குப்பேட்டையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பழைய இரும்பு குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.  கொருக்குப்பேட்டையில் வேலு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனிலேயே தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, உயர்நீதிமன்றம், சத்யமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 5 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 


சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீடுகளில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறின. ஏ.சி.மிஷின், தண்ணீர் பைப்புகள் போன்றவையும் முழுவதுமாக சேதமடைந்தன. தீ விபத்து நடந்த இடம் மிக குறுகலான தெருவாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்ததில் சிரமம் ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Korukkupettai, Chennai , Chennai, Iron Cotton, Fire Accident
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100