பட்டியலினத்தை சேர்ந்த 11,900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி!: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு..!!

தெலுங்கானா: பட்டியலினத்தை சேர்ந்த 11 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு நிதி திட்டத்தை அறிவித்தார். அதில், சுமார் 11 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, பட்டியலினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்க ரூ. 10 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலா 100 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டில் பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டுக்கு தெலுங்கானா அரசு ரூ.40 ஆயிரம் கோடி செலவிடும் என தகவல் தெரியவந்திருக்கிறது.

Related Stories:

>