×

சென்னையில் தங்கம் விலை மாற்றம் இன்றி ஒரு சவரன் ரூ.35,560-க்கும் விற்பனை: கிராம் ரூ.4,446-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் தங்கம் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.4,446-க்கும், சவரன் ரூ.35,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். 


இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து சவரன் ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஆனால் நேற்று பவுனுக்கு ரூ.129 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 640-க்கு விற்றது.  தேவையின் அடிப்படையில் தங்கத்தை வாங்குவதே தற்போதைய நிலையில் சிறந்ததாக இருக்கும் என்று நடுத்தர குடும்பத்தினரை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



Tags : Chennai , Chennai, Gold prices, without change, for sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...