×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய அரசை கண்டித்து மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள், விசிக அழைப்பு

சென்னை:  மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ. 100ஐ தாண்டியிருக்கிறது.இந்த நெருக்கடியான காலத்தில் மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. \இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து இன்று தொடங்கி 29, 30  தேதிகளில் மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து  வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி,  2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.  செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மக்கள் உணர்வை பிரதிபலித்து நடத்தும் ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று, ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Vizika , Petrol, Diesel Price, Union Government, Demonstration, Left
× RELATED நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு...