×

கல்பாக்கம் அணுமின் நிலைய 2வது உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணு மின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை அணு மின் நிலையத்தில்  220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதை மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மாநிலங்களின்  தேவைகளுக்கேற்ப  பகிர்ந்தளிப்படும்.  இந்நிலையில், அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலை கடந்த 2018 ஜனவரி மாதம் பழுதானது. இதனால் மத்திய தொகுப்பிற்கு கிடைக்க வேண்டிய உற்பத்தி வெகுவாக குறைந்தது.

இதனை சரி செய்ய  விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், உயர் மட்ட அதிகாரிகள் முயன்றும்  தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், இதுவரை  அந்த முதலாவது அணு உலை சரி செய்யப்படவில்லை. இந்நிலையில், அங்குள்ள 2வது அணு உலை கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதானது. 2 அணு உலைகளும் பழுதடைந்ததால், மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் இணைந்து  2வது அணு உலையை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிர முயற்சிக்கு பிறகு, 2வது அணு உலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து,  நேற்று அதிகாலை முதல் அதில் மின் உற்பத்தி தொடங்கியது.

Tags : Kalbaum , Kalpakkam, Atomic Power Station, Power Generation
× RELATED செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின்...