×

10 கொலை உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சி.டி. மணி குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: பத்து கொலை உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சி.டி. மணியை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(எ) சி.டி. மணி(38). தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் சிடி விற்பனை செய்து வந்தார். அதன் பிறகு சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சி.டி. மணி, பிறகு தென் சென்னையில் பகுதியில் ரவுடியாக உருவெடுத்தார். இவர் மீது 10 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உட்பட 32க்கும் வழக்குகள் உள்ளது.

கடந்த ஆண்டு காக்காதோப்பு பாலாஜி பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு தனது நண்பர் சி.டி.மணியுடன் காரில் வந்தார். அப்போது தாதா சம்பா செந்தில் ஆட்கள் அந்த காரை பின் தொடர்ந்து அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரம் அருகே வரும்போது, சி.டி.மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி வந்த கார் மீது நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் சி.டி.மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் உயிர் தப்பினர். அதன் பிறகு தலைமறைவாக இருந்து வந்த சி.டி.மணியை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் முயன்றபோது போரூர் மேம்பாலத்தின் மீது தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடும் போது மேம்பாலத்தின் மீது இருந்து குதித்த போது அவரது கை மற்றும் கால்கள் உடைந்தது.

இந்நிலையில் தென் சென்னை ரவுடி சி.டி. மணி மீது பல்ேவறு புகார்கள் உள்ளதால் போலீசார் பரிந்துரைப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சி.டி.மணியை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Shankar Jiwal , Murder, Dada C.D. Hours, thuggery law, arrest
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...