ராயபுரம் 48வது வட்டம் சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி 48வது வட்டம் சார்பில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ராயபுரத்தில் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்ட செயலாளர் பாலன் தலைமையில் நடந்தது.  சிறப்பு அழைப்பாளர்களாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.மேலும், அப்பகுதியை சேர்ந்த 150 பேருக்கு மளிகை, காய்கறி, அரசி, சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் பகுதி செயலாளர்கள் சுரேஷ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ₹4 ஆயிரம், 14 வகை மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பதும் உதவி செய்வதும் திமுக அரசுதான். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுத்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமைச்சர்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

Related Stories:

>