×

உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான்: மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது என்று  பேசியுள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.கொரானா அச்சுறுத்தல் தொடர்வதால் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். நான் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டேன்; 100 வயதுடைய எனது தாயும் 2 டோஸ்களை செலுத்தி கொண்டார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது: மிகச்சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின்  சொந்தப் போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது.

அவர்கள் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள். நண்பர்களே, இதுபோன்ற ஏராளமான பெயர்கள் உள்ளன, ஆனால் மன் கி பாத்தில், இன்று நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடிந்தது. மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் ஒரு சிறந்த வில்லாளன். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். இப்போது ஜாதவ் டோக்கியோவில் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இந்த சண்டையில், ஒன்றாக, பல அசாதாரண மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம் என்றார்.

Tags : Abimani ,Modi ,Manki Bath Radio , I am a fan of Tamil, the oldest language in the world, Tamil culture: Prime Minister Modi's speech on Monkey Bath radio show
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...