×

போக்சோவில் முதியவர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்த 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் கடைக்கு சென்று, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, அவ்வழியே ஆட்டோவில் வந்த ஆசாமி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை தள்ளிவிட்டு அலறி கூச்சலிட்டபடி தப்பி ஓடினாள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, நடந்ததை கூறி அழுதாள். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அந்த ஆசாமியை பிடித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளிதரன் (56) என்பது தெரிந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது  செய்தனர்.


Tags : Pokmon , Elderly man arrested in Pokmon
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது