மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நானே; பொதுச்செயலாளரும் நானே: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடந்து  முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு கட்சியிலிருந்து விலகினர். இது பற்றி ஆலோசனை நடந்த நிர்வாகிகளுடன் இணையவழி கலந்துரையாடலில் கமல்ஹாசன் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,  ‘‘கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்னர்.

மேலும் சில அறிவிப்புகள் இனி வெளியாகும். புதிய மாநிலச் செயலாளர்கள்,  நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்றத்  தேர்தலில் களம் கண்டவர்கள்தான். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்று கமல்பேசினார். புதிய நிர்வாகிகள் விவரம்: பழ. கருப்பையா அரசியல் ஆலோசகர். பொன்ராஜ் வெள்ளைச்சாமி அரசியல் ஆலோசகர். ஏ.ஜி. மெளரியா துணைத் தலைவர் கட்டமைப்பு. தங்கவேலு துணைத் தலைவர் களப்பணி மற்றும் செயல்படுத்துதல். செந்தில் ஆறுமுகம் மாநிலச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம், செய்தித் தொடர்பு. சிவ. இளங்கோ மாநிலச் செயலாளர் கட்டமைப்பு. சரத்பாபு மாநிலச் செயலாளர் தலைமை நிலையம். ப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர். ஜி. நாகராஜன்  நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்.

Related Stories:

>