×

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் ரஸ்ஸல்

கிரெனடா: தென் ஆப்ரிக்க அணியுடன் டி20 தொடரில் மோதும் வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் மீண்டும் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்க அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸ்ஸல் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார். போலார்டு தலைமையிலான அணியில் நட்சத்திர வீரர்கள் கிறிஸ் கேல், டுவைன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் களமிறங்குவது தென் ஆப்ரிக்க அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), நிகோலஸ் பூரன், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கேல், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஒபெத் மெக்காய், ஆந்த்ரே ரஸ்ஸல், லெண்டில் சிம்மன்ஸ், கெவின் சின்க்ளேர்.



Tags : Russell ,West Indies ,T20 , Russell in the West Indies T20 squad
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...