×

கும்பகோணம் அருகே சொந்த கட்சி பிரமுகரை குடும்பத்தோடு குண்டு வீசி கொல்ல சதி திட்டம்: பாமக மாநில நிர்வாகி கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சொந்த கட்சி பிரமுகரை குடும்பத்தோடு கொல்ல சதி திட்டம் தீட்டியதாக பாமக மாநில நிர்வாகியை போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே மருத்துவக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின். வன்னியர் சங்க மாநில துணை தலைவர். இவரது தம்பியும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜா கடந்த 2015 ஏப்ரல் 3ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான லாலி(எ)மணிகண்டன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதில் லாலி மணிகண்டனை, ஜாமீனில் எடுப்பதற்காக அவரது சகோதரர் மகேஷ், பலரிடம் நிதி திரட்டி வந்ததாகவும், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமனிடமும் அவர் நிதி பெற்றதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 13ம் தேதி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் .ஸ்டாலினை தொடர்பு கொண்ட உளவுத்துறையினர், தங்களை குடும்பத்தினருடன் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய ஒரு கும்பல் சதிதிட்டம் தீட்டியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நீங்கள் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சேலம் மத்திய சிறையில் உள்ள லாலி மணிகண்டன் மற்றும் மகேஷ், செந்தமிழ்செல்வன், முகமது யாசின், கோபி, மற்றொரு மணிகண்டன், பாலமுருகன், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் ஆகிய 8 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் லாலி மணிகண்டன் சிறையில் உள்ளார். முகமது யாசின், கோபி ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமனை தவிர்த்து மணிகண்டன், பாலமுருகன், மகேஷ், செந்தமிழ்செல்வன் ஆகிய 4 பேரை 13ம்தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக விசாரணைக்காக திருவிடைமருதூர் காவல்நிலையத்திற்கு 13ம்தேதி அழைத்து செல்லப்பட்ட வெங்கட்ராமனிடம் காலை முதல் மாலை வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் கைது செய்யப்படாமல் இரவு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கும்பகோணம் அருகே கள்ளூரில் வெங்கட்ராமன் வீட்டிற்கு சென்ற திருவிடைமருதூர் போலீசார், அங்கிருந்த வெங்கட்ராமனை கைது செய்து அழைத்து சென்றனர். சொந்த கட்சி பிரமுகரை குடும்பத்தோடு கொல்ல திட்டம் தீட்டிய வழக்கில், மாநில நிர்வாகி கைதானது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kumbakonam ,Bamaga , Conspiracy to bomb own party leader's family near Kumbakonam: Bamaga state administrator arrested
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...