சொசைட்டி தலைவருக்கு கொலை மிரட்டல் பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி கைது

அகமதாபாத்: பாலிவுட் நடிகையும், டி.வி நிகழ்ச்சி போட்டியாளருமான பாயல் ரோஹத்கியை குஜராத் மாநிலம் அகமதாபாத் போலீசார் கைது செய்து, சேட்டிலைட் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நடிகையின் திடீர் கைது குறித்து போலீசார் கூறுகையில், ‘அகமதாபாத்தில் உள்ள சுந்தர்வன் எபிடோம் சொசைட்டி பகுதியில், நடிகை பாயல் ரோஹத்கியின் தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்கினார். அவர் சொசைட்டி உறுப்பினராக இல்லை என்றாலும், கடந்த 20ம் தேதி நடந்த கூட்டத்துக்கு பாயல் ரோஹத்கி வந்தார். சொசைட்டி உறுப்பினராக இல்லாத நிலையில், அவரை பேசுவதற்கு சொசைட்டியின் மற்ற உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், கூட்டத்துக்கு வந்தவர்களை தகாத வார்த்தைகளால் பாயல் ரோஹத்கி திட்டியுள்ளார். மேலும், சொசைட்டி தலைவரை கொன்றுவிடுவதாக மிரட்டி இருக்கிறார். சொசைட்டி நிர்வாகத்தினர் அளித்த புகாரின்படி, பாயல் ரோஹத்கியை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories:

>