12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்!: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு..!!

சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வல்லுனர் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்திலான 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கும் முறையை அரசு அறிவித்துள்ளது. 

இதனை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக அரசு இவ்வாறு முடிவு செய்திருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். விகிதாச்சார மதிப்பெண் முறையால் உயர்படிப்பு மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் முழுமைபெறாத கல்விக்கு நாம் ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்று மற்றொரு தரப்பு கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

மாணவர் சேர்க்கைக்கு முன்பாக விருப்ப மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கையாகும். 2021 - 22ம் கல்வியாண்டில் எந்த நடைமுறையை பின்பற்ற இருக்கிறது என்பதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 

Related Stories:

>