×

கடந்த கால மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் குறித்து ஆய்வு; தவறு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை!: அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை..!!

சென்னை: கடந்த கால மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தவறு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை அவர் தொடங்கிவைத்தார். 


அதன் தொடர்ச்சியாக அமைச்சர் தலைமையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் மற்றும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்கள் அறிவிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறினார். 


சென்னை மாநகராட்சியில் கடந்த கால டெண்டர் முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தவறு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் மழை காலத்தில் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்கவும், மழைநீரை சேமிக்க புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 


அதேபோன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும், ஏரிகள் மூலமாகவும் சென்னைக்கு கூடுதலான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 



Tags : Minister ,KN Nehru , Corporation tender, malpractice, investigation, Minister KN Nehru
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...