ஆங்கிலத்தில் தகவல் கோரினால் இந்தியில் பதில் கடிதம்!: தபால் உறை மீதான விலாசமும் இந்தி...ஆர்.டி.ஐ. ஆர்வலருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவோருக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில் அளிப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் தங்களுக்கு தேவையான தகவல்களை கோரி பெறுகின்றனர். ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பும் போது ஆங்கிலத்தில் பதில் அளிப்பதே வாடிக்கையாக இருந்தது. 

இந்நிலையில் சென்னையை  சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் இந்திய மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து இவருக்கு பதிலளிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள காலாவதி சரண் மருத்துவமனை இந்தியில் பதில் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி கடித உறை மீதான விலாசத்தையே இந்தியில் தான் எழுதி அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில், ஆங்கிலத்தில் தகவல் கோருபவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என தகவல் ஆர்வலரான தயானந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார். இதேபோல் கடந்த வாரம் தென்காசியை சார்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு வடமாநில அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

More
>