திமுகவின் தொடர் அதிரடி... ஒன்றியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், தேசிய அளவில் டிரெண்டான #INDIAisUNION ஹேஷ்டேக்!!

சென்னை : ஒன்றியம் குறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், தற்போது ட்விட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக்கும் Union of states என்ற வார்த்தையும் டிரெண்டாகிறது. திமுக ஆட்சி ஏற்றது முதல் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று சொல்லி வருகிறது. இதுகுறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. அப்படி சொல்லக்கூடாது என்று பலர் வலியுறுத்தியும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று திமுக தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறது.

அண்மையில் ‘ஒன்றிய அரசு’தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது,

 ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.  

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும் என்றுதான் உள்ளது.  India, that is bharat, shall be a union of states  என்றுதான் இருக்கிறது.  அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.  ‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள்.  

எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. (மேசையைத் தட்டும் ஒலி)  அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது.  அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் - பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்,என்றார். ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், தி இந்து பத்திரிகை, we will continue to use the term ‘union gov.’, says stalin என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.இந்நிலையில் இன்று இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை வலியுறுத்தி என்று டுவிட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது. 

Related Stories: