×

அதிக நாடுகளில் பரவிய கொரோனாவில் புதிய டெல்டா வகை கொரோனாவுக்கு முதலிடம்

டெல்லி: இந்தியாவில் உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் உலகிலேயே அதிக நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனா வைரஸ் இதுவரை 85 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இது தான் தற்போது வரை கண்டறியப்பட்டதிலேயே அதிக பரவும் தன்மை கொண்ட வைரஸாக திகழ்வதாகவும் கூறியுள்ளது.

ஜெனிவாவில் இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் கேபிளிசிஸ் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலேயே புதிய டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவியதாக தெரிவித்தார். பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருப்பதால் தொற்று இன்னும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவன இயக்குனர் கவலை தெரிவித்தார்.



Tags : corona
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...