நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த படகு: 9 மீனவர்களை காப்பாற்றிய கடலோர காவல் படை

சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்ற படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றினர். சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து மாரியப்பன் என்பவரின் படகில் 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ண பட்டினம் அருகே நடுக்கடலில் சென்ற போது படகு தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால் 9 மீனவர்களும் கடலில் குதித்தனர். நெடுநேரமாக கடலில் மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் அவர்களை காப்பாற்றி கிருஷ்ணபட்டினத்தில் கரை சேர்த்தனர்.

Related Stories:

>