×

பீகாரில் தகுதித் தேர்வு லட்சணம் அன்று சன்னிலியோன் இன்று அனுபமா: மார்க்‌ஷீட்டில் குளறுபடி

பாட்னா: பீகாரில் நடத்தப்பட்ட ‘எஸ்டெட்’ தேர்வு மதிப்பெண் சான்றில் நடிகை அனுபமா பரமேஸ்வரின் புகைப்படம் இருந்ததால், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் இளநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (எஸ்டெட்) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ரிஷி குமார் என்ற தேர்வரின் மதிப்பெண் சான்றிதழில் தேர்வரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இவர் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். மலையாளத்திலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

மதிப்பெண் சான்றிதழில் தேர்வர் பெற்ற மதிப்பெண் மற்றும் இதர விபரங்கள் சரியாக இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த தேர்வு முடிவு சான்று, சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பீகார் அரசால் நடத்தப்படும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வில் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்தப் பிறகு, இப்போது மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இளநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதல்வர் நிதிஷ்குமார், இவ்வாறு இளைஞர்களுக்கான தேர்வில் பல்வேறு மோசடிகளை செய்வதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருகிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Sunilyon ,Bihar , Did Sunilyon experience today on the qualifying exam logo in Bihar: Mess in the marksheet
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...