×

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது எப்படி?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி அந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. 


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இதையடுத்து 25ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும்  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். 


இந்த நிலையில் தற்போது திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் அனைவரும் கலந்துக் கொண்டுள்ளனர். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வியூகம் எவ்வாறு வகுக்க வேண்டும். 


மக்களின் எண்ணங்களை எவ்வாறு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திட்டங்களை தீட்டி அவர்களை கவர வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை போன்ற நகரங்களிலும் தேர்தலானது நடத்தப்படவில்லை. 


இந்த தேர்தலும் அறிவிக்கப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். வெற்றி வீயூகங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் தற்போது நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரியவந்திருக்கிறது. 



Tags : BC ,Diplu ,Stalin , Local elections, Chief Minister MK Stalin, DMK district secretaries meeting
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...