×

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தர கூடாது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனே வழங்கிடுக : அரசு தரப்பில் பேச்சு!!

டெல்லி : காவேரி நதிநீர் ஆணையத்தின் 12-வது கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.  ஆணையத்தின் தலைவர் திரு எஸ்.கே.ஹெல்டார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சச்சேனா,இ.ஆ.ப., காவேரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் திரு. ஆர்.சுப்ரமணியன், பொதுப்பணித்துறை, அரசு சிறப்பு செயலாளர் திரு கே. அசோகன் நீர்வளத்துறை, முதன்மை தலைமைப் பொறியாளர் திரு கே. ராமமூர்த்தி, கர்நாடக சார்பில் நீர்வளத்துறை செயலாளர் திரு ராகேஷ், இ.ஆ.ப., கேரளா சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பி.கே.ஜோஷ், இ.ஆ.ப., பாண்டிச்சேரி சார்பில் ஆணையர் மற்றும் செயலாளர் திரு விக்ராந்த் ராஜா மத்திய நீர்வளத் துறை சார்பில் திரு நவீன்குமார், இ.ஆ.ப., மத்திய வேளாண்மைத்துறை சார்பில் டாக்டர் கோபால், இ.ஆ.ப., மத்திய ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஸ்ரீ சஞ்சய் அவாஸ்தி, இ.ஆ.ப., மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற ஆணைப்படி வழங்க வேண்டிய தண்ணீர் ஜுன், 2021 மாதத்திற்கு 9.19 டி.எம்.சியும், ஜுலை மாத்திற்கு 31.24 டி.எம்.சியும் குறுவை சாகுபடிக்கு மாதாந்திர வாரியாக தண்ணீர் வழங்க  வலியுறுத்தப்பட்டதன் பேரில் ஆணையம் கர்நாடகாவை உச்சநீதிமன்ற ஆணையின்படி நீரை வழங்க வலியுறுத்தியது.   கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்ப கட்ட பணிகளும் செய்ய அனுமதிக்கக் கூடாது.  மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்  உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதன் பேரில் இப்பிரச்சனைகளின் விவாதம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.   மேலும் சேலம் சரபங்கா நீரேற்றும் திட்டம், காவேரி குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவைகள் பின்பு விவாதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.


Tags : Karnataka ,Meghrathu ,Tamil Nadu , காவேரி நதிநீர்
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...