×

இளவரசர் பிலிப்பின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சி இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் தொடங்கியது..!!

லண்டன்: பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சி ஒன்று இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் தொடங்கியுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான பிலிப், கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனது 99வது வயதில் மறைந்தார். கடந்த ஜூன் 10ம் தேதி பிலிப்பின் 100வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி Prince Philip  A Celebration என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 


பல்வேறு வெளிநாடு பயணங்களின் போது அவருக்கு தரப்பட்ட பரிசுகளும், நினைவுச் சின்னங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 1973ம் ஆண்டு கனடா அரசு வழங்கிய ஆடம்பரமான மன்னர் அங்கியும், 1972ம் ஆண்டு பிரான்ஸ் அதிபர் ஜார்ஜஸ் வழங்கிய ஐம்பொன்னால் செய்யப்பட்ட பெரிய வெட்டுக்கிளியும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர் தெரிவித்ததாவது, இவற்றை எல்லாம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். 


இளவரசர் பிலிம் மறைந்த போது அவருக்கு இங்கு தான் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அதே இடத்தில் தற்போது மக்கள் வந்து, அவர் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியை பார்க்கலாம். ராணிக்கு உற்ற துணையாக நீண்ட காலம் இருந்த இளவரசர் குறித்து மக்கள் அதிகம் அறிந்துகொள்ள விரும்புவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார். 


மறைந்த இளவரசர் பிலிப், தனது வாழ்நாளில் 14 புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பாலான பிரதிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் சார்ஜ் அரங்கில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை இக்கண்காட்சியை மக்கள் பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 



Tags : Prince Philip ,Windsor Castle ,England , Prince Philip, Exhibition, England, Windsor Castle
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...