கிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு தார்சாலை அமைக்க கோரிக்கைகிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை

பந்தலூர் :  பந்தலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரமுள்ள கிளன்ராக் வனப்பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 11 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் தனியார் தேயிலை, காபி தோட்டங்களும் செயல்பட்டு வருகின்றது. பந்தலூரில் இருந்து அப்பகுதிக்கு செல்வதற்கு குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையை மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் சாலையில் மண் சரிவுகள் ஏற்பட்டும், மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. கிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு செல்லும் மண் சாலையை மாவட்ட நிர்வாகம் தார்சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து இப்பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: