×

எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 52 பேர் கொன்று குவிப்பு ; ஐ.நா. கடும் கண்டனம்!!

எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் டைக்ரே கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற ககிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கும் எத்தியோப்பியா அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. 8 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டைக்ரே பகுதியில் மக்கள் நெருக்கடி மிக்க சந்தையில் எத்தியோப்பிய விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.பொதுமக்கள் மீதான எத்தியோப்பிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு ஐ. நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து எத்தியோப்பியா விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.இதற்கு விளக்கம் அளித்துள்ள எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது,  போராளிகளின் மறைவிடங்கள் மீது தான்  தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.


Tags : Ethiopia , எத்தியோப்பியா
× RELATED எத்தியோப்பியாவில் இருந்து...