×

சிவசங்கர்பாபா பள்ளி வழக்கு நிர்வாகி, ஆசிரியை முன்ஜாமீன் மனு: சிபிசிஐடி பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடியால் கைது செய்யபட்டுள்ளார். மேலும், அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர்.
 இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிர்வாகி  ஜானகி சீனிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கட்ராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில், 2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சிபிசிஐடி போலீசார் சேர்த்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.  

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். தீபாவின் முன் ஜாமீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சிபிசிஐடியை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று வாதிட்டார். மனுக்களை விசாரித்த நீதிபதி, மூவரின் முன் ஜாமீன் மனுக்களுக்கும் சிபிசிஐடி பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டதுடன், திருத்த மனுக்களை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.



Tags : Sivasankar Baba School Case Administrator ,CPCIT ,Court , Sivasankar Baba School Case Administrator, Teacher Pre-Bail Petition: CPCIT Response High Court Order
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...