திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் பதவியேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக குழுவை கலைத்து ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நிர்வாக குழு தலைவராக செயல் அதிகாரி ஜவகரை அரசு நியமித்தது. இதையடுத்து,   ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி, நிர்வாக குழு தலைவராக ஜவகர் ரெட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  பின்னர், நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராக  தர்மா ரெட்டிக்கு நிர்வாக குழு தலைவர் ஜவகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இருவரும் பதவியேற்புக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

Related Stories:

>