சைக்கிளில் சென்று முட்டை, பிரட் விற்பனை செய்யும் சோனு சூட்

மும்பை: சைக்கிளில் சென்று முட்டை, பிரட் விற்பனை செய்கிறார் நடிகர் சோனு சூட்.  கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார் சோனு சூட். இப்போது புதுமையான ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளார். முட்டை, பிரட் உள்பட சில உணவு வகைகளை தனது சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்கிறார். வீடுகளுக்கு சென்று இந்த பொருட்களை விற்கிறார். பத்து முட்டை வாங்கினால் ஒரு பிரட் பாக்கெட் இலவசமாக தருகிறார்.  இது பற்றி சோனு சூட் கூறும்போது, ‘மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதில் ஒன்றுதான் இந்த சூப்பர் மார்க்கெட் திட்டம்.

யார் அழைத்தாலும் அவர்களின் வீடுகளுக்கு சென்று இந்த உணவு வகைகளை விற்கிறேன். அவர்களின் வீடுகளுக்கு செல்ல பணம் பெறுவதில்லை. உணவு பொருளுக்கு மட்டும் பணம் பெறுகிறேன். இதுவும் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவத்தான்’ என்றார்.

Related Stories:

More
>