×

நெல்லை சிமென்ட் ஆலையில் பைப் வெடிகுண்டை வைத்தது மதுரை எலக்ட்ரீசியன்: போலீஸ் விசாரணையில் தகவல்

நெல்லை: நெல்லை அருகே தாழையூத்து தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் கிடந்த 2 பைப் வெடிகுண்டுகள் மற்றும் ரிமோட்டை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக தாழையூத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (29), பேட்டை பகுதியைச் சேர்ந்த சலீம் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆலை நிர்வாகம் நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்காமல் நிறுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர், ஆலை நிர்வாகத்திடம் ரூ.50 லட்சம் நஷ்டஈடு தராவிட்டால் ஆலையில் 5 இடங்களில் வெடிகுண்டுகளை வைப்போம் என்று போனில் மிரட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் இருவர் கைதாகியுள்ள நிலையில், தேடப்படும் 3 பேரில் ஒருவர் மதுரை எலக்ட்ரீசியன் என்பதும், அவர் தான் பைப் வெடிகுண்டை தயாரித்து ஆலையில் வைத்துள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

Tags : Madurai ,Nellai cement plant , Madurai electrician planted pipe bomb at Nellai cement plant: Police investigation
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...