×

மோடி மீது அவதூறாக பேசியதாக வழக்கு: ராகுல் காந்தி மீண்டும் சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்

சூரத்: அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக இன்று மீண்டும் ஆஜரானர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவதூறாக ஏதும் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக இன்று ராகுல் காந்தி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.



Tags : Modi ,Rahul Gandhi ,Azar ,Surat , rahul gandhi
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...