மின்வாரிய செலவை குறைக்க முதல்வர் நடவடிக்கை அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க நீண்ட காலம் ஒப்பந்தம்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழகத்தில் இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசில் மின்வெட்டு இல்லாமல் பார்த்து கொண்டிருந்தோம். அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த 9 மாதம் பராமரிப்பு பணி முந்தைய ஆட்சியில் செய்யவில்லை. எடுத்து கொள்ளப்பட்ட பணிகள் 10 நாட்களில் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஆட்சியில் செய்ய தவறிய பணிகளையும் சேர்த்து 10 நாட்களில் முடிக்கப்பட்டு மின் தடையில்லா மாநிலமாக மின் விநியோகம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி : மின் உற்பத்தியை அதிகரித்ததால் மின்வெட்டை தவிர்க்க முடியும். அமைச்சர் செந்தில் பாலாஜி : 2021ல் 2406 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நமது உற்பத்தி திறனை குறைத்து விட்டு, தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி பயன்படுத்தி இருக்கிறீர்கள். 2006-11ல் தனியாரிடம் மின்சாரம் வாங்கும் போது ஒரு யூனிட் ரூ.3.58. 2021ல் ரூ.5.02 ஆக உள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம்: தமிழகத்தில் உள்ள மொத்த மின்சார உற்பத்தி நிறுவுத்திறன். நுகர்வு எவ்வளவு உள்ளது. இரண்டுமே சரியாக இருக்கிறதா என்று தான் கேட்கின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி : நோய் தொற்றின் காரணமாக தொழிற்சாலை இயங்காமல் உள்ளதால் இங்கிருந்து 200 மெகாவாட் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பபடுகிறது. ஆகையால் இப்போது ஏற்பட்டிருக்கிறது மின் தடை. குறிப்பாக பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி: 2006-2011 முதல் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.13 கொள்முதல் செய்யப்பட்டது. அவ்வப்போது அரசாங்கம் நிலைமைக்கு தக்கவாறு மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். பிபிஎன் நிறுவனத்திடம் யூனிட் ரூ.8.22க்கு வாங்கப்பட்டது. செந்தில் பாலாஜி: திமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. குறுகிய காலத்தில். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் ஆகும்.

ஆனால் கடந்த ஆட்சியில் 25 ஆண்டு, 15 ஆண்டுகள் என நீண்டகாலம் ஒப்பந்தம் ஆகும். அதுவும் 1000 மெகாவாட் டெண்டர் போடப்பட்டுவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டபோது 3,300 மெகாவாட் என போடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் போட்ட ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்கு நீண்டகால கொள்முதலுக்கு அதிக விலை கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளீர்கள். ஆளுநர் உரையில் முதல்வர், கடந்த கால ஆட்சியில் செய்த தவறுகளை, குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதனால் ஒரு ஆண்டுக்கு ரூ.2000 கோடி அளவுக்கு வட்டி கட்டுவதில் இருந்து மின்சார வாரியம் செலவை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories:

More
>