×

உடல் நலக்குறைவால் இறந்த மோப்பநாய்க்கு 24 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக 2 மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் ஒன்று குண்டுகள் வெடிப்பு தொடர்பாக குற்றங்களை கண்டுபிடிக்கவும், மற்றொன்று கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த காவேரி என்ற 6 வயது மோப்ப நாய்க்கு நேற்றுமுன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மோப்ப நாய் இறந்தது. இதைத்தொடர்ந்து மோப்பநாயின் உடல், மாவட்ட எஸ்பி சீனிவாசன் முன்னிலையில் 24 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஆயுதப்படை மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Mopanai , Illness, sniffer dog, police respect
× RELATED ஆந்திராவில் இருந்து...