×

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களிடத்தில் சென்று 9 லட்சத்து 77 ஆயிரத்து 638 மனுக்கள் பெறப்பட்டன. 5 லட்சத்து 22 ஆயிரம் மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 4 லட்சத்து 54 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பபட்டன. என்ன காரணத்திற்கான நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டன. பட்டாக்கேட்டு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டன.

9 லட்சத்து 77 ஆயிரத்து 638 மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா, பசுமை வீடுகள் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வந்தது. தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி : கடந்த 1957-2006 வரைக்கும் 12 லட்சம் பேர் முதியோர் உதவி தொகை வாங்கினார்கள். கடந்த 2006-11ல் மட்டும் 12 லட்சம் பேர் என மொத்தம் 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டன. 12 லட்சம் பேருக்கு சாதனை படைத்தது கலைஞர் அரசு. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்: கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் நாங்கள் கொடுத்த முதியோர் உதவி தொகையை நிறுத்தி வைத்துள்ளீர்கள்.இன்னும் 1 லட்சம் பேருக்கு கொடுக்க நிலுவையில் உள்ளது. நாங்கள் கொடுத்ததை 10 ஆண்டுகால ஆட்சியில் நிறுத்தி வைத்தீர்கள்.

Tags : Minister ,KKSSR ,Ramachandran , Elderly pension suspension during 10 years of AIADMK rule: Minister KKSSR Ramachandran
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி