வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்கள் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி சென்னை தெற்கு வணிகவரி இணை ஆணையர் ஏ.சுவாமிநாதன் தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூடுதல் உறுப்பினராகவும், சென்னை கிழக்கு இணை ஆணையர் எம்.ராஜி திருநெல்வேலி இணை ஆணையராகவும், அட்வான்ஸ் ரூலிங் அதிகாரி செயலர் அலுவலக இணை ஆணையர் எஸ்.குறிஞ்சி செல்வன் மதுரை இணை ஆணையராகவும், திருநெல்வேலி இணை ஆணையர் டி.பத்மாவதி அட்வான்ஸ் ரூலிங் அதிகாரி செயலர் அலுவலக இணை ஆணையராகவும், சென்னை  2 நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் எஸ்.எம்.சரஸ்வதி மதுரை சட்டம் இணை ஆணையராகவும், திருச்சி நுண்ணறிவு இணை ஆணையர் சரோஜினி சென்னை தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூடுதல் உறுப்பினராகவும்,

 மதுரை நுண்ணறிவு இணை ஆணையர் எஸ்.ரஷியா சென்னை கிழக்கு இணை ஆணையராகவும், சேலம் நுண்ணறிவு இணை ஆணையர் விமலா திருச்சி நுண்ணறிவுபிரிவு இணை ஆணையராகவும், திருநெல்வேலி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் சுகந்தி  சேலம் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், சென்னை மேல்முறையீடு இணை ஆணையர் ரவி  சென்னை வாட் மற்றும் தணிக்கை பிரிவு இணை ஆணையராகவும்,  சென்னை சட்டம் இணை ஆணையர் அன்புக்கனி சென்னை தெற்கு இணை ஆணையராகவும், மதுரை சட்டம் இணை ஆணையர் சண்முகநாதன் திருநெல்வேலி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், சென்னை வாட் மற்றும் தணிக்கை பிரிவு இணை ஆணையர் சிவ ஹரிணி சென்னை மேல்முறையீடு இணை ஆணையராகவும்,

சென்னை  ஜி.எஸ்.டி., மேல்முறையீடு இணை ஆணையர் பிரபாவதி சென்னை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  இணை ஆணையர் கே.எம்.கார்த்திகேயாயினி சென்னை சட்டம் இணை ஆணையராகவும், சென்னை தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூடுதல் உறுப்பினர் இந்திரா மதுரை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>