×

ஆசியாவிலேயே முதல் முறை போலீஸ் மோப்ப நாய்களுக்கு நினைவிடம் கட்டிய கேரளா: ஓய்வுக்கு பின் வசிக்க நீச்சல் குளத்துடன் தனியறை

திருவனந்தபுரம்: கேரளாவில் போலீஸ் படையில் பணியாற்றி இறந்த மோப்ப நாய்களுக்கு மரியாதை செலுத்தம் விதமாக, கேரள அரசு நினைவிடமும் கல்லறையும் கட்டியுள்ளது.  கேரளாவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் உயிரை காக்கும் பணியில் சில நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு இந்த நாய்கள் இறப்பது உண்டு.  கேரள காவல்துறை டிஜிபி.யாக லோக்நாத் பெகரா பதவியேற்ற பிறகு, இந்த நாய்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகளை செய்துள்ளார்.

பணி காலத்திலோ அல்லது அதன் பிறகு இறந்தாலோ, அவற்றை மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக திருச்சூரில் உள்ள கேரள போலீஸ் அகாடமி வளாகத்தில் மோப்ப நாய்கள் நினைவிடமும், கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. இதை பெகரா திறந்து வைத்துள்ளார். மோப்ப நாய்களுக்கு நினைவிடமும், கல்லறையும் கட்டப்பட்டு இருப்பது ஆசியாவிலேயே இதுதான் முதன்முறை. மேலும், வயதாகி ஓய்வு பெறும் மோப்ப நாய்களும் அனாதையாக விடப்படுவது இல்லை. தற்போது, கேரள காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற 19 நாய்கள் உள்ளன. அவற்றுக்காக தனியறைகள் உள்ளன.
அறையில் டிவி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. குளிப்பதற்காக நீச்சல் குளமும் உள்ளது. மேலும், சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. உடல்நிலையை கண்காணிக்க 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Tags : Kerala ,Asia , Asia, Police Mob Dog, Kerala
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...