×

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்!: ஐகோர்ட்

சென்னை: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய  தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் 2021-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது. 


இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக்கோரி டிஜிட்டல் நியூஸ் பப்ளிசர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுன் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 


அதே சமயம் இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என அனுமதி அளித்துள்ளனர். ஏற்கனவே இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 



Tags : Information Technology Law, Action, Relief, iCourt
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...